Preaload Image
Back

About us

கொழும்பு வலயக் கல்வி அலுவலகம்

HomeAbout

தூர நோக்கு

கல்வி சமூகத்திற்கு தரமான கல்வி சேவைகளை விழங்கும் சிறந்த கல்வி சேவை மையமாக இருத்தல்

பணி கூற்று

புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலைக் கல்வியின் தொடர்ச்சியான தரமேம்பாட்டின் செயல்முறையை நிர்வகித்தல் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு தரமான சேவைகளை வழங்குதல்.

பெருமையுடன் ஒற்றுமையுடன் சிறந்து விளங்குதல்

இலங்கையின் வர்த்தக தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேற்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான கல்வி வலயங்களில் கொழும்பு ஒன்றாகும். கொழும்பு வலயக் கல்வி அலுவலகம் கொழும்பு புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரச பாடசாலை , அரை அரச பாடசாலை மற்றும் தனியார் பாடசாலை உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களின் கல்வித் தர மேம்பாட்டை நிர்வகித்து செயற்படுத்துகிறது. கொழும்பு கல்வி வலயத்தில் அரச பாடசாலைகள் 123, அரை அரச பாடசாலைகள் 10, தனியார் பாடசாலைகள் 10 மற்றும் பிரிவெனாக்கள் 10 என உள்ளன.

build

இந்த வலயத்தில் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய, கொழும்பு தெற்கு மற்றும் பொரளை என நான்கு கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. புதிய கற்றல் உத்திகள் மற்றும் வருடாந்த கருப்பொருள்களின் (The Main Objects) அடிப்படையில் புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வலயத்தின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துதே கொழும்பு வலயக் கல்வி அலுவகத்தின் பிரதான நோக்கமாகும். அனைத்து பாடப் பணிப்பாளர்கள், பிரதேச பணிப்பாளர்கள் மற்றும் சேவையில் உள்ள ஆலோசகர்கள் வலய ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வலய மாணவர்களின் திறமை ம ட்டத்தை அ திரிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

இவர்களுடன் கொழும்பு கல்வி வலய பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்களின் கடமைகளையும் பொறுப்புைகளையும் பாராட்டத்தக் வகையில் நிறைவேற்றுகின்றனர்.பல இன, மற்றும் பல கலாச்சார பின்னணியுடன் வேறுபட்டது,கொழும்பு கல்வி வலயம் தனித்துவமானது. இவ்வாறான சூழலில் கல்வி இலக்குகளை அடைவதே வலயத்தின் பாரிய சவாலாகும். தேசிய,மாகாண , அரை அரசு மற்றும் தனியார் உட்பட பல்வேறு பள்ளிகளும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது . கொழும்பு கல்வி வலயம்சமூக பொருளாதார நிலைமைகளில் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை உள்ளடக்கியது; அதன் நோக்கங்களை அடைவதில் மற்றுமொறு சவாலாக மாறியுள்ளது. சமூக பொருளாதார மற்றும் கலை கலாச்சார நிலைமைகளின் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகம் பரிசோதனைகள் (Experiments) மற்றும் ஆய்வுகள் மூலம் தனது திறன்களை பலப்படுத்தி வெற்றியின் பாதையில் செல்கிறது

Tamil